அருவில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள பொட்டல்பட்டியில் பிரபு(26) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம் உப்புத்துறையில் உள்ள யானைக்கஜம் அருவில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து பிரபு மற்றும் அவரது நண்பர்கள் அருவிக்கு கீழே தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் […]
