முன்கூட்டியே விடுதலை கோர தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சோமு, பாலமுருகன், ஹரிஹரன் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இதில் பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தனது மகன் ஹரிகரனை முன்கூட்டியே விடுதலை […]
