இந்திய விடுதலைப் போராட்டத்தில், கலந்துகொண்டு கடுமையான தண்டனைகளை அனுபவித்து, உயிர் தியாகம் செய்த சில முக்கிய வீர மங்கைகள் குறித்து பார்ப்போம். முதலாவதாக, குஜராத் மாநிலத்தை சேர்ந்த உஷா மேத்தா, தன் 8 வயதில், 1928-ஆம் வருடத்தில் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ‘சைமன் வெளிய போ’ என்று முழக்கமிட்டவர். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது நண்பர்களுடன் இணைந்து ‘காங்கிரஸ் ரேடியோ’ என்னும் வானொலி ஒலிபரப்பை ரகசியமாக நடத்தி, அதற்காக சிறைக்குச் சென்று, 1946-ஆம் வருடத்தில் வெளியில் […]
