சீனா தங்களுடைய துறைமுகங்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பணியாற்றும் சரக்கு கப்பல்களை நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக எழுந்த தகவல் உண்மையானது அல்ல என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய கப்பல் பணியாளர்கள் சங்கம் மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, இந்தியாவை சேர்ந்த நபர்கள் பணிபுரியும் சரக்கு கப்பல்களை தங்கள் நாட்டிலுள்ள துறைமுகங்களில் நுழைவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 20,000 இந்திய […]
