தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஓசூர் வழியாக தமிழகத்திற்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய காவல்துறையினர் அதன் […]
