தமிழகத்தில் எவ்வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எந்த வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களுக்கு மே மாதத்தில் ஆறு நாட்களுக்கு உச்சபட்ச மின்தேவை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்த போதிலும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. […]
