அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் அரசிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு தடையில்லா சான்று பெற்று கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் […]
