கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவள்ளிக்குப்பம், தொரவி மற்றும் வெட்டுக்காடு போன்ற கிராமங்களில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் அந்த கிராமங்களை தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஊரக வளர்ச்சி இயக்குனரான காஞ்சனா பாதிக்கப்பட்ட இடத்திற்கு திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார். […]
