கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்படும் தடை காலம் வரும் 15-ஆம் தேதி முதல் துவங்குகிறது. மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு வங்ககடல் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 60 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடைகாலம் வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூன் 14-ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த தடை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் 13 ஆயிரம் விசைப்படகுகள் […]
