தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இந்நிலையில் சென்ற 3 வாரங்களாக தடைபட்டிருந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் இன்று (மார்ச்.5) நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் […]
