தென்காசி நெல்லை மாவட்டங்களில் 5 இடங்களிலும் தூத்துக்குடியில் 10 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, கூடங்குளம் அரசு மருத்துவமனை, நெல்லை சிந்துபூந்துறை செல்வி நகர் மாநகராட்சி மருத்துவமனை, கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை என சுமார் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தென்காசியில் தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், […]
