அமெரிக்காவின் பிரபல மிருகக்காட்சி சாலையில் உள்ள 9 குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பிரபல மிருகக்காட்சிசாலையில் ஒன்பது குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த 9 குரங்குகளில் 4 குரங்குகள் ஓரங்கட்டான் வகையைச் சேர்ந்தவை. […]
