தடுப்பூசி போட அரசு கட்டாயப் படுத்தினால் தவறில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்று, அதை கையில் எடுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. தமிழகத்திலும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகின்றது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் […]
