தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் சுமார் 2000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 12,62,089 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் 62,202 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2,98,634 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 9,02,253 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி […]
