கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் துரிதப்படுத்தினார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதிக்குள் அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோசாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4ம் […]
