ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தங்கள் நாட்டிற்குள் நுழைய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு அனுமதி இல்லை என்றும் அவரின் விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்க மெல்போர்ன் நகருக்கு சென்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அதற்கான சரியான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவரின் விசா ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் விமான நிலையத்தில், சுமார் ஒன்பது மணி நேரங்களாக காத்திருந்தார். […]
