ஆண்டிபட்டி அருகே தற்பொழுது சிமெண்ட் கலவையால் தடுப்பணை கட்டப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலக்குண்டு மலை அடிவாரத்தில் வண்ணானூத்து ஓடை இருக்கின்றது. இந்த ஓடையின் குறுக்கே சென்ற 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் சிமெண்ட் கலவைக்கு பதிலாக செம்மண் கலவையால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவோடு இரவாக தரமற்ற தடுப்பணை அகற்றப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரிடம் […]
