கள்ளக்குறிச்சியிலிருந்து வரும் மணிமுக்தாறு கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம் வழியே சென்று சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாற்றூர் அருகில் வெள்ளாற்றில் கலந்து வருகிறது. இந்த ஆறு வாயிலாக பெரும்பாலான ஏரிகள் தண்ணீர் பெற்று, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பருவ மழை காலங்களில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமிக்கும் அடிப்படையில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. அதன்படி விருத்தாசலம் அருகில் பரவலூர் கிராமத்தில் 3 வருடங்களுக்கு முன் மணி முத்தாற்றின் குறுக்கே 15கோடி […]
