பூமிக்கு அடியில் இறங்கி பூஜை நடத்த சென்ற அகோரியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன்-ஜெயலட்சுமி. இவர்களுக்கு அசோக் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றுள்ளார். இதையடுத்து அவர் காசி சென்று அங்குள்ள சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்த அவர் ஊரிலுள்ள ஒரு தோட்டத்தில் குழி தோண்டியுள்ளார். அதில் சிவனுடைய […]
