இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சாதியைக் காரணம் காட்டி வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். சூ… மந்திரகாளி என்பதைப் போல நாளையே எல்லாம் நடந்துவிடும் என்று நானும் நினைக்கவில்லை. நீங்களும் நினைக்கமாட்டீர்கள்.கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கின்றன. அதில் […]
