சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்தது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் அவர், விஷம் அருந்தியோ அல்லது வேறு விதத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் உடற்கூறாய்வு தொடர்பாக முழுமையான அறிக்கை வந்த பிறகே காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இங்கு […]
