தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக […]
