பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போலீஸ்காரர்கள் முருகேசன், சிற்றரசு போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தஞ்சை அருகே உள்ள […]
