கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கி மேடு பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் நேற்று அவ்வழியாக சென்ற மயில் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் என்பவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மயிலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் […]
