கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் ஐந்து தலை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமரன்(33). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வேப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுவாதிக்கும்(24) கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சுவாதி கருவுற்ற நிலையில் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத நிலையில் குடந்தை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுவாதி பிரசவத்திற்காக இரவு சேர்த்துள்ளனர். […]
