முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்குமார் மேற்பார்வையில், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வல்லம் பேருந்து நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலைகளில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனம், கார், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட பல […]
