தஞ்சை ரவுடியை 4 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் ரோடு அண்ணாநகர் முதல் தெருவில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் சூர்யா விளார் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகே ஆட்டோ ஸ்டாண்ட் திறந்தார். இதனை அறிந்த விளார் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், ஹரிஹரன், நாகராஜ், சதீஷ்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு சென்று […]
