தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையில் இருக்கும் வீட்டில் பழமையான உலோக சிலையை பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சரவணன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி 1 1/2 அடி அகலமும், 5 அடி உயரமும் உடைய சிவகாமி அம்மன் உலோக சிலையை கைப்பற்றினர். இந்நிலையில் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த சிலை தொன்மையான தோற்றத்துடன் இருப்பதால் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக […]
