உலகப்பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூரில் வருடந்தோறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது ஆகும். விஜயதசமி பண்டிகையையொட்டி ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கர்நாடக மாநிலத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. மகிஷாசூரன் என்ற கொடிய அரக்கனை மைசூரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளை மைசூர் மக்கள் தசராவாக வருடந்தோறும் […]
