இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் P.T.உஷா. இந்தியாவின் தங்க மங்கை, தடகள நாயகி, ஆசிய தடகள ராணி, தடகள அரசி உள்ளிட்ட பெயர்களுக்கு சொந்தக்காரர். விளையாட்டுத் துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் அவர். கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த உஷா சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளி அளவிலான பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளார். 1976ஆம் ஆண்டு கேரள அரசு […]
