விவசாயியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு அருகே கல்லத்திவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ஹரிதாஸ் என்பவருக்கும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஹரிதாஸ் வீட்டிற்கு ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் வந்தவர்கள் சுபாஷின் வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுபாஷ் வழித்தடத்தில் காரை நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதனால் […]
