வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் இருதயசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்த 4 1\2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து இருதயசாமி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருட்டு நடந்த அன்றைக்கு இருதயசாமி தனது […]
