திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 35 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க சடாரியை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் காணிக்கையாக வழங்கியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் என்பவர் இருக்கிறார். அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.35,89,000 மதிப்பெண் தங்கத்தால் செய்யப்பட்ட சடாரியை காணிக்கையாக நேற்று தேவஸ்தான அதிகாரியிடம் அளித்துள்ளார்.அவருக்கு கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
