லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆர் நகரில் லாரி டிரைவரான விஷ்ணு(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் அருகிலுள்ள நல்லூர் பக்கத்தில் மறு கால் தலையில் உள்ள புலமாடன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வைசண்முகம் சாலை பகுதியை சேர்ந்த […]
