பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது மனைவி தீபலட்சுமியுடன் அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கே.என்.கே சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் தீபலட்சுமியின் மூன்றரை பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து சி சி டிவி காட்சிகளை ஆராய்ந்து திருப்பூர் […]
