ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக சோதனை நடத்திய போது அங்கிருந்த சில பொருள்கள் மற்றும் கழிவறை ஆகியவை தங்கத்தால் ஆனது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 6 காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரி கர்னல் அலெக்ஸி சபோனோவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்திய மதிப்பில் ரூ.1.9 […]
