தங்க கட்டிகள் கடத்தல் கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே புடையூர் கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி ஊருக்கு திரும்பிய பாலையா தன்னுடைய மாமியார் ராணியிடம் ஒரு பெட்டியை கொடுத்து அதை பத்திரமாக வைக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தன்னுடைய நண்பர்களான ஜெகன், உசேன், ஜாகீர், இப்ராஹீம், செல்வமணி, சாகுல் ஹமீது, […]
