மயிலாடுதுறையில் தங்கை இறந்த மன வருத்தத்தில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவருடைய தங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்தே வெங்கடேஷ் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு அவரது உறவினர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறியுள்ளனர். இருப்பினும் வெங்கடேஷ் தங்கை […]
