பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் ஒரு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி தமீம் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. இந்த விடுதியின் மீது கடந்த 26-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் ஒரு மேஜை தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி […]
