தூத்துக்குடியில் புதிய உணவகம் ஒன்று 27 பரோட்டா 1 சிக்கன் ரைஸ் பலூடா போன்றவற்றை ஒரே நேரத்தில் வேகமாக சாப்பிட்டு முடித்தால் தங்க நாணயம் பரிசு என்று அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட விஐபி பிரியாணி கடையில் கடந்த சில நாட்களாக பரோட்டா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடைக்கு சாப்பிட வருபவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனை அறிந்த இளைஞர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். […]
