கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகே தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உளிச்செட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மிதித்து நாசம் செய்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதில் ஐயூர் கிராமத்தில் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி பயிர்கள் முற்றிலும் நாசமானது. […]
