நாட்டின் 76வது சுதந்திரதினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ்கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சுதந்திரதின உரையாற்றிய அவர், தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது ஆகிய விருதுகளை வழங்கினார். இவற்றில் தகைசால் தமிழர் விருது தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் அடிப்படையில் சென்ற 2021 ஆம் வருடம் முதல் […]
