போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள முடிப்பட்டி கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு கோமதி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கோமதிக்கு ஏற்கனவே கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்த நிலையில் 2-வதாக கர்பமடைந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடத்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை […]
