கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் 7-வது மாடியில் கனிம வள உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு கொடுப்பதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் வந்தார். அப்போது அங்கு இருந்த உதவி இயக்குனர் முகிலனிடன் இருந்த மனுவை வாங்க மறுத்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி விட்டார். […]
