இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் ராம்தான் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதனால் அனைவரும் தகன மேடையினுள் நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மழையால் தகனமேடை மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]
