பிரிட்டனில் விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது வானில் இருந்து விண்கற்கள் பூமியில் வந்து விழுகிறது. அதேபோல் ஒரு நிகழ்வும் பிரிட்டனில் நடந்துள்ளது. பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.54 மணி அளவில் விண்கல் ஒன்று எரிந்து கொண்டே தரையில் வந்து விழுந்துள்ளது. இதனை லண்டன், பர்மிங்காம், பிரிஸ்டல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் நேரில் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி அங்கு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி […]
