பிரபல நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, சமூக வலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக இயங்கி வருபவர். ட்விட்டரில் குஷ்புவுக்கு சுமார் 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இதற்கிடையே, தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் குஷ்பு பேட்டி அளித்தார். மேலும், தான் சொன்னது உண்மை என்று காட்டும் வகையில், பத்திரிகை இணைப்பு ஒன்றையும் அவர் ட்வீட் செய்திருந்தார். ஆனால், அது அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்டது என்றும் தற்போது 100 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது […]
