நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணா கணவரின் சேவையைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், […]
