இந்திய நாட்டின் எல்லைப் பகுதியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது சமீப காலமாகவே பாகிஸ்தான் நாட்டிலிருந்து ட்ரோன்களின் ஊடுருவல் அதிக அளவில் இருக்கிறது. இந்த ட்ரோன்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை கடத்துவதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் ட்ரோன்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்று ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக ட்ரோன்களை உள்நாட்டில் கொள்முதல் செய்யும் அமைப்பு தொடர்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ராணுவம் தகவல் கேட்டுள்ளது. […]
