பிரிட்டனுக்கு சென்று தடுப்பூசி போட்டு விட்டு திரும்ப, சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே ஆட்டம் காட்டி கொண்டு வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக பல நாடுகளும் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்து பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஆறு நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்னும் இந்தியாவில் தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப் படவில்லை. […]
